tamilnadu

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் இந்திய கம்யூ மாநில செயலாளர் இரா. முத்தரசன் பேட்டி

திருப்பூர், ஏப்.27 பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனியன்று இரா.முத்தரசன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 24 ஆம் தேதி பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறித்து பேசாத ஒன்றை பேசியதாக சமூக வலைதளங்களில் பரவியதை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையாக வெளியிட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது . நான் பேசியதை அவர் முழுமையாக கேட்கவேண்டும் பாப்பிரெட்டிப்பட்டி உட்பட 10 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டு மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்துள்ள நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும், அதேபோல் பொன்பரப்பியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் 22 தொகுதி தேர்தல் முடிவுகளால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தில் 3 எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறும் சபாநாயகர் அதிமுக ஆட்சிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.மத்திய அரசு அனுமதித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு இரா.முத்தரசன் கூறினார்.