உடுமலை, ஆக. 6- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள தால், உடுமலை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணை யின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 13 அடி உயர்ந்ததால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலை அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியையும், வழியோ ரத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்க ளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகி றது. பாசனத்திற்காக கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலை யிலும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், தென் மேற்குப் பருவ மழை தீவிர மடைந்துள்ளதால், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தலையாறு, வாகுவாரை உள் ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 13 அடியாக உயர்ந் துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அணையின் மொத்த நீர்மட்டமான 90 அடியில் 65.52 அடியாக வும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5831 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் விநா டிக்கு 10 கன அடியாகவும் உள்ளது.