tamilnadu

img

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

தாராபுரம்,  ஜூலை 25- அமராவதி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் வியாழனன்று தாராபுரத்திற்கு வந்தடைந்தது. உடுமலை அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீருக்காக ஆயிரம் கன அடி  வீதம் 3 நாட்களும், ஐந்நூறு கன அடி வீதம் 3 நாட்க ளுக்கும் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 3 நாட்கள் கழித்து வழியில் உள்ள  தடுப்பணைகளில் நிரம்பிய பிறகு தாராபுரம் வந்த டைந்தது.  இதனால் தாராபுரம் பகுதியில் நிலவிய குடிநீர் தட்டுப் பாடு ஓரளவு தணியும். இதற்கிடையே விவசாயிகள்  குடிமராமத்து பணிக்காக தளவாய்பட்டிணம், அலங்கியம்,  கொளிஞ்சிவாடி, தாராபுரம் பழைய வாய்க்கால்களுக்கு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும் என அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மோட்டார்  வைத்து தண்ணீர் திருடுபவர்கள் மீது வருவாய்த்துறை யினர், காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர்  இணைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புதுப்பை வரையாவது தண்ணீர் சென்றடையும் என தெரிவித்தனர்.