tamilnadu

பெருமாநல்லூரில் நெடுஞ்சாலைத் தடையை அகற்ற வலியுறுத்தி ஜூன் 22ல் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 14 - திருப்பூர் அருகே பெருமாநல்லூ ரில் கொண்டத்துக் காளியம்மன் கோயில் நிர்வாகத்தால் அடைத்து வைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் தடையை அகற்ற வலியுறுத்தி ஜூன் 22ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவ தென அனைத்துக் கட்சிகள் தீர்மா னித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெருமாநல்லூர் அலுவலகத்தில் சனி யன்று திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் திமுக ஒன்றியச் செயலாளர் விஸ்வ நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்புசாமி, எஸ்.அப்புசாமி, கிளைச் செயலாளர் ரங்கசாமி, ஜி.சண் முகம், மதிமுக ஒன்றியச் செயலாளர் வி.கே.சந்திரமூர்த்தி, செந்தில்குமார், குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர் மகேந் திரன், தேமுதிக சார்பில் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான தார் பாதையை கொரோனா காரணமாக கோவில் நிர் வாகம் அடைத்து வைத்தனர்.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் இந்த தடையை அகற்றாமல் கோவில் நிர்வாகம் உள்நோக்கத்து டன் பாதையை மறைத்து வருகிறது. பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற அலு வலகத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டும், பல்வேறு முயற்சிகள் மேற் கொண்டும் கோயில் நிர்வாகம் பிடிவா தமாக தடையை நீக்காமல் உள்ளனர். எனவே இந்தக் கூட்டத்தில் வரும் 22 ஆம் தேதி அன்று அனைத்து கட்சி மற் றும் பொது மக்கள் இணைந்துத் தடை நீக்க ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித் துள்ளனர். குறிப்பாக, திருப்பூர் பெருமாநல் லூர் - நம்பியூர் செல்லும் தேசிய நெடுஞ் சாலைத்துறைக்கு சொந்தமான பாதை யில் சுமார் 30 கிராம மக்கள் மற்றும் மருத்துவமனை ஆம்புலன்ஸ் மற்றும் பொது மக்கள் பயனடையும் இந்தப் பாதையை திறந்து விட வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.