tamilnadu

டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு இணையதளத்தில் இலவசப்பயிற்சி

திருப்பூர், ஜூன் 5- திருப்பூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வு களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள தாவது, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து  போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் வீட்டிலிருந்த படியே தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.

இந் நிலையில், கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர் வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் இணைய தளம் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்பினை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. திருப்பூர் மாவட்டத்தில் போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இணைய தளத்தில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான காணொலி வழிக் கற்றல் பெற  tiruppurstudycircle@gmail.com என்ற மின்னஞ்சலில் விருப்பம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.