tamilnadu

மார்க்சிஸ்ட் கட்சி பெண் ஊழியர்களுக்கு திருப்பூரில் அரசியல் பயிற்சி முகாம்

திருப்பூர், ஜூன் 19 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பெண் ஊழியர்களுக்கான அரசி யல் பயிற்சி முகாம் திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலை யத்தில் புதனன்று நடை பெற்றது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி தலைமையில் நடைபெற்ற இம்முகாமை கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே. உண்ணிகிருஷ்ணன் தொடக்கி வைத்தார். கட்சியின் தோற்றம், வர லாறு குறித்து கட்சியின் முன்னாள் மாநில கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் அ.நிசார் அகமது உரை யாற்றினார். இதையடுத்து பெண்களை திரட்டுவது தொடர்பாக மாநிலக்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாநில பொதுச் செய லாளருமான பி.சுகந்தி உரையாற்றினார்.  இதில் மாவட்டக்குழு, இடைக்குழு உள்பட முன்னணி பெண் ஊழியர்கள் சுமார் 50 பேர் பங்கேற்றனர்.  நிறைவாக கட்சியின் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் முகாமை நிறைவு செய்து வைத்துப் பேசினார்.