அவிநாசி, ஜூன் 10 – அவிநாசி அருகே சேவூரில் பொது மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் தீய ணைப்புத் துறையினர் கிருமி நாசினி தெளிக் கும் பணியில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அரசு அறிவித்தது. இதனால் பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கின. இதனால், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அந்தந்த பகுதி களில் துப்புரவுப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அவிநாசி தீயணைப்பு துறை யினர் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணி யம் தலைமையிலான குழுவினர் சேவூர் கை காட்டி ரவுண்டானா, காவல் நிலைய பேருந்து நிறுத்தம், கோபி சாலை, புளியம் பட்டி சாலை, சூரிபாளையம், ராமியம்பா ளையம், தண்டுக்காரன்பாளையம் ஆகிய பேருந்து நிறுத்தங்களிலும், புறவழிச் சாலைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.