அவிநாசி, ஆக.11- சேவூர் அருகே இரு சக்கர வாகனம், லாரி மீது மோதி விபத்துக்குள்ளா னதில் ஒருவர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே குட்டகம் தண்ணீர்பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மொய்யாக்கவுண்டர் (66). இவர் தனது இருசக்கர வாக னத்தில் மாட்டுத் தீவ னங்களை ஏற்றிக் கொண்டு சேவூரில் இருந்து வீடு நோக்கி சென்று கொண்டி ருந்தார். அப்போது, தண் ணீர்பந்தல்பாளையம் அருகே சென்றபோது, சாலைப் பணிக்காக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீஸார் முதிய வரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக் காக அவிநாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். மேலும், இதுதொ டர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.