tamilnadu

இந்து மக்கள் கட்சி நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது மாவட்ட ஆட்சியர் ஆணை

திருப்பூர், ஜூலை 26- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து  மக்கள் கட்சியின்  திருப்பூர் மாவட்ட நிர்வாகி மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் மணி மாறன்(40). இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு  மாவட்ட தலைவரான இவர் கடந்த ஜீன் மாதம் தனது மாமனரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பெருமாநல்லூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய  சிறையில் அடைத்தனர். இதேபோல் இந்து மக்கள்  கட்சியின் வடக்கு மாவட்ட செயலா்ளரான நந்தகோபால் (எ) பகவான்(42). தன்னைத்தானே அரிவாளால் வெட்டி  கொண்ட வழக்கில் பெருமாநல்லூர் போலீசா ரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் காவல் துறையினரால் நடத்தப் பட்ட விசாரணையில், பகவான் தன்னைத்தானே அரிவா ளால் வெட்டி கொண்டதற்கு மணிமாறன் மூலகாரணம் என்பதும், இருவரும் நாடகமாடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல் மணிமாறனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிமாறன் மீது குண்டர் சட்டம் பாய்வ தாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆணை பிறப் பித்தார்.