திருப்பூர், ஆக. 6 - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நாசகர புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வலியுறுத்தி 15. வேலம்பாளையத்தில் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. புதனன்று மாலை வேலம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க வேலம்பாளையம் நகரத் தலைவர் நவநீதன் தலைமை வகித்தார். இதில் நவீன வர்ணாசிரம அடிப்படையில் மக்களைப் பாகுப டுத்தி கல்வியை வகுப்புவாத மற்றும் வணிகமயம் ஆக்கிப் பெரும்பான்மை யான ஏழை வீட்டுப் பிள்ளைகளின் உயர்கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிக் கும் புதிய கல்விக் கொள்கையைக் கைவிட வேண்டும். தாய்மொழி, பண் பாட்டை அழித்து சமஸ்கிருதத்தைப் புகுத்துவதுடன், மாநில உரிமைக ளைப் பறிக்கும் இந்த கல்விக் கொள் கையை ஏற்க முடியாது என்று முழக் கங்கள் எழுப்பப்பட்டன. அத்துடன் தமிழகத்தில் பெரியார் சிலையை அவமதிக்கும் காவிக் கூட்டத்தின் செயலைக் கண்டித்தும் முழக்கமிடப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க வேலம்பாளையம் நகரச் செய லாளர் ஹனீபா, த.பெ.தி.க நிர்வாகி முத்துக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்த கோபால் உள்பட பெருந்திரளானோர் தனிமனித இடைவெளியுடன் பங் கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.