headlines

img

சாதி விஷம் தொலையட்டும்; சமத்துவம் நிலைக்கட்டும்!

சாதி விஷம் தொலையட்டும்; சமத்துவம் நிலைக்கட்டும்!

கண்ணகி- முருகேசன் சாதி ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 

சாதியக் கொடுமைக்கு எதிராகவும், நீதியை நிலைநாட்டவும், நீண்ட நெடிய போராட்டம் நடத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். சாதி ஆணவப் படுகொலையை தடுக்கும் வகை யில் சிறப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சி யாக வலியுறுத்தி வருகிறது. 

தற்போது இந்த வழக்கில் நீதியை நிலைநாட்ட வும், சாதி ஆணவ பித்து தலைக்கேறி கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட வர்களுக்கும், துணை போன காவல்துறை அதி காரிகளுக்கும் தண்டனையை உறுதி செய்ய நெடிய போராட்டத்தை நடத்த வேண்டி இருந்தது.

கண்ணகி- முருகேசன் கொலை வழக்கில் நியாயமான விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராடின என்பதும் குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு கண்ணகியும், முருகேச னும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தற்காக கண்ணகியின் உறவினர்களால் கொடூர மாக சித்ரவதை செய்யப்பட்டு மூக்கு மற்றும் காது களில் விஷம் ஊற்றி கொல்லப்பட்டனர். இரு வரது உடல்களும் எரித்து சாம்பலாக்கப்பட்டன. 

இதுகுறித்து முருகேசனின் உறவினர்கள் காவல் துறையில் புகார் செய்த போதும், காவல்துறையி னர் குற்றச் செயலை மூடி மறைக்கவே முயன்றனர். தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கண்ணகி, முருகேசன் சாதி ஆணவப் படு கொலை வழக்கில் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்குத் தண்டனையும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் உட்பட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. 

உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறை யீட்டில் மருதுபாண்டியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதோடு, ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டி ருந்த இருவரது தண்டனையும் ரத்து செய்யப் பட்டது. 11 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் வழங்கிய காவல் துறையினர் உட்பட 11 பேருக்கான ஆயுள் தண்ட னையை தற்போது உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

கண்ணகி- முருகேசன் கொலை வழக்கிற்கு பிறகுதான் சாதி ஆணவப் படுகொலைக்கு எதி ரான குரல் வலுவடையத் தொடங்கியது. தற்போது அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சாதி ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத் திற்கான தேவையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.