திருப்பூர், பிப். 5 - ஊத்துக்குளி தாலுகா, குன்னத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகக் கட்டிடத்திற்கு அடிக் கல் நாட்டப்பட்டது. குன்னத்தூர், கருங்கல்மேடு ஓம் சக்தி கோயில் அருகில் புதன்கிழமை நடைபெற்ற இந்த கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு குன்னத்தூர் கட்சிக் கிளைச் செயலாளர் எஸ்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் பி.சின்னச் சாமி வரவேற்றார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பங்கேற்று அடிக்கல் நாட் டினார். மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணி கிருஷ்ணன், சி.மூர்த்தி, ஆர். குமார், கே.ரங்கராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் கே.சரஸ் வதி, தாலுகா குழு உறுப் பினர் ஜெ.கந்தசாமி, கட்டிடக் குழுத் தலைவர் கே.ஏ.ராம சாமி, ஆதியூர் கிளைச் செய லாளர் எஸ்.ரவீந்திரன், ஒத்தப் பனைமேடு கிளைச் செயலா ளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தமிழ் மாநில காங் கிரஸ் மாவட்ட தலைவர் ஒ.கே.சுப்பிரமணி, திராவிட முன்னேற்ற கழக வழக்கறிஞர் அணி நிர்வாகி சுப்ரமணி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக குன் னத்தூர் கட்சிக் கிளை சார்பில் கே.ஏ.கே.ராஜ்பரத் நன்றி கூறி னார்.