அவிநாசி, மே 24 - அவிநாசி அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல் போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப் பட்டார். அவிநாசி அருகே குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த வர் மனோகர். இவரது மகன் ரகுமான் (23). இவர் வெள்ளி யன்று பெருமாநல்லூர் சர்வீஸ் ரோட்டில் செல்போன் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ரகுமானின் செல்போனை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இதுகுறித்து ரகுமான் அளித்த புகாரின் பேரில் அவிநாசி காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜனகராஜ் (20)என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஜனகராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.