திருப்பூர், ஜூலை 1 - கொரோனா ஊரடங்கு காலத் தில் கடன் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியும் அதை மீறி வாடிக்கையாளர்களிடம் கடன் தொகையை வட்டியுடன் வசூலிக்க வந்தவரை திருப்பூரில் பொதுமக் கள் சிறைப்பிடித்தனர். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று மாதங்கள் முடிந்தும், ஜூலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அடுத்த கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆறு மாத காலத்திற்கு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தவணைத் தொகை கேட்டு வலியுறுத்தக் கூடாது என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவுறுத்தி உள்ளது. எனினும் அதை மீறி தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கி கள் மற்றும் நுண் நிதி நிறுவனத் தினர் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்களிடம் கடன் வட்டி தவணை வசூலிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், திருப்பூர் வீர பாண்டி பகுதியில் தனியார் நிதி நிறு வன ஊழியர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் தவணைத் தொகை கேட்டு சென்றனர். அப்போது பெண்கள் நிதி நிறுவன ஊழியரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையும் இல்லா மல் வருமானமும் இல்லாமல் தவிக்கும் நிலையில் கடன், வட்டி தவணை கேட்டு மிரட்டுவதா என்று வாக்குவாதம் செய்து அவரைச் சிறைப்பிடித்தனர். இந்த தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்த னர். ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய அடிப்படையில் ஆறு மாதத்திற்கு தவணைத் தொகை கேட்டு வலியு றுத்தக் கூடாது என ஊழியர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.