tamilnadu

img

சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யும் பனியன் நிறுவனங்கள் தமிழக முதல்வருக்கு சிஐடியு கடிதம்

திருப்பூர், ஜூன் 8- திருப்பூர் காட்டன் பிளாசம் கம் பெனி நிர்வாகம் வேலைநீக்கம் செய் துள்ள 200 க்கும் மேற்பட்ட தொழி லாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குமாறு சிஐடியு பனியன் தொழிலாளர் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் தமிழக முதல்வ ருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தில் ஜி.சம்பத் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்தில் காட்டன் பிளாசம் (இந்தியா) பி லிட் என்ற நிறுவனம் பல வருடங்க ளாக இயங்கி வருகிறது. இத்தொ ழிற்சாலையில் 1000 க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கம்பெனி மூடப் பட்டதால் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கப்படவில்லை.  இக் காலத்திற்கு  எவ்வித  சம்பளமும் வழங்கப்படவில்லை. இந்நிலை யில், அரசு உத்தரவின்படி தற்போது தொழிற்சாலை திறக்கப்பட்டு மே 18 ஆம் தேதி முதல்  50 சதவிகித தொழி லாளர்களுடன் செயல்பட்டு வருகி றது.  தற்போது 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் வேலை செய்து வரும் நிலையில் நிர்வாகம் வேண்டுமென்றே 200க்கும் மேற் பட்ட தொழிலாளர்களுக்கு வேலை தர மறுத்து மிரட்டி வேலை நீக்கம் செய்து வருகிறது. தொழிற்சாலை திறக்கப்பட்டு இரண்டு வாரத்திற்கு மேலாகியும் வேலை வழங்கப்படாத தால் இவர்கள் வாழவழியின்றி குடும்பத்துடன் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு மாதத்திற்கு மேலாக சம் பளம் கொடுக்கவில்லை. தற்போது இரண்டு வாரத்திற்கு மேலாக வேலை தரமால் இருப்பதால் இத் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.  எனவே தாங்கள் இவர்களுக்கு வேலையும், தரவேண்டிய சம்பளத் தையும் பெற்றுத்தர உடனே நடவ டிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள் கிறோம். மேலும் திருப்பூர் மாவட்டத் தில் செயல்படும் பல பனியன் நிறு வனங்கள் இது போன்று தொழிலா ளர்களை சட்டவிரோதமாக வேலை  நீக்கம் செய்து வருகின்றன.

இத னால் ஆயிரக்கணக்காண தொழி லாளர்கள்  வேலையிழக்கும் அபா யம் ஏற்பட்டுள்ளது. எனவே தாங் கள் உடனே நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு பணி பாது காப்பு அளித்திட வேண்டும் என சிஐ டியு பனியன் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத் கேட்டுக் கொண் டுள்ளார்.