tamilnadu

img

குற்றச் சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்

அவிநாசி, மே 12-அவிநாசி அடுத்த சேவூர் பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. சேவூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர், வணிக நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைத்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் சேவூர் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு அவிநாசி காவல் துறை துணை கண்காணிப்பாளர் பரமசாமி தலைமை தாங்கினார். ஆய்வாளர் சம்பங்கி, துணை ஆய்வாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில், குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் கட்டாயமாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டது.