அவிநாசி, ஜூலை 10- அவிநாசியில் மழை நீர் சேமிப்பு குறித்து விழிப் புணர்வுக் கூட்டம் புத னன்று பேரூராட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது. அவிநாசி பேரூராட் சிக்குட்பட்ட 18 வார்டு களில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள், திருமண மண்டப நிர்வாகிகள் உள் ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்ட மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப் புணர்வு கூட்டம் நடை பெற்றது. இதில் ஓட்டு வீடு கள், கான்கிரீட் தள வீடு களில் மழைநீரை குழாய் மூலம் வடிகட்டி தரை மட்ட தொட்டியில் சேமிக்க வேண்டும். மேலும் நிலத்தடி செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மழைநீரை குழாய்கள் அமைத்து கிணறுகளில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி கூறுகையில், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் உள்ள மழை நீர் சேமிப்பு பராமரிப்பில் இருக்க வேண்டும். மழைநீர் தொட்டிகள் இல்லாத இடங்களில் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இந்த மழைநீர் தொட்டி அமைப்பதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றாத வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.