tamilnadu

திருப்பூர் காவல் நிலையத்தில் சாதியைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி

திருப்பூர், செப். 11 – திருப்பூர் காவல் நிலையத்தில் சாதியைச் சொல்லித் திட்டி அவமானப்படுத்தியதால் அருந்ததியர் சமூகப் பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இது குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணை யரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜனசக்தி நகரில் வசித்து வருபவர் செல்வராஜ் (60). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்க ளுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளார். இவர்களது மகன் சங்கர் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது 20ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுடன்  கொண் டாடிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அப் போது வீட்டுக்கு அருகில் இருப்போருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எதிர்தரப்பினர் சங்கர் மீது காவல் நிலை யத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகார் தொடர்பாக, சங்கரைத் தேடி வந்த போலீசார், அவர் இல்லாததால் அவ ரது தாய் ஈஸ்வரியை மகளிர் காவல் நிலை யத்துக்கு அழைத்துள்ளனர். அங்கு அவரை காவலர்கள் அநாகரிகமான வார்த்தைக ளால் சாதியைச் சொல்லித் திட்டி அவமா னப்படுத்தியுள்ளனர். அது மட்டுமின்றி, சங்கரின் தங்கை பள்ளி மாணவியான பவித் ராவையும், ஈஸ்வரியின் பேத்தி 5 வயது பெண் குழந்தை தரணீஸ்வரியையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து காவல் துறை யினர் கேவலமாகப் பேசியுள்ளனர். சாதியைச் சொல்லி திட்டி அவமானப்ப டுத்தியதுடன், சங்கரைப் பெற்றதற்கு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதானே! என்றும் ஈஸ் வரியிடம் காவல் அதிகாரி ஒருவர் மிக மோச மாகத் திட்டியதாக கூறப்படுகிறது.

இத னால் மனம் உடைந்த ஈஸ்வரி அவமானம் தாங்காமல் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவம னையில் அனுமதித்து, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். பெண்ணை சாதியைச் சொல்லி திட்டி அவமானப்படுத்தியதுடன், அவரது மக ளான பள்ளி மாணவியையும், பேத்தி 5 வயது பெண் குழந்தையையும் காவல் நிலை யத்துக்கு அழைத்து வந்து இழிவுபடுத்திய காவல் துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஊ.பி.ராசு மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் அளித்துள் ளார்.