திருப்பூர், ஜூலை 18 - ஏற்றுமதியாளர்களுக்கு தற்போதுள்ள சூழலில் இருந்து தொழிலை மேம்படுத்துவதற்கு வங்கிகள் உதவி செய்யு மாறு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகளாவிய கோவிட் பாதிப்பு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கி இருந்தன. பின்னலாடைத் தொழில் துறையும் பாதிக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் ஆலைகள் இயக்கப்படுவதற்கு வங்கிகள் குறிப்பிடத்தகுந்த உதவி செய்தன. அத்துடன் வெளிநாட்டு வர்த்தகர்கள் தர வேண்டிய பணத்தைப் பெறவும் ஏற்றுமதியாளர்கள் இணக் கமாகப் பேசித் தீர்வு கண்டு வருகின்றனர்.
மனிதர்களுக்கு உணவு, உடல் நலத்துக்கு அடுத்த படியாக அவசியத் தேவையாக உடைகள் இருக்கின்றன. எனவே இதற்கான நிரந்தரமான சந்தை வாய்ப்பு உள் ளது. மேலும் திருப்பூர் பின்னலாடைத் தொழில் மேம்பாடு அடைவதற்கு வங்கிகள் தேவையான நிதியுதவி செய்ய வேண்டும், என்று ராஜா சண்முகம் கேட்டுக் கொண்டிருக்கி றார்.