tamilnadu

புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி இருக்க வைத்த பின்னலாடை நிறுவனத்தின் மீது வழக்கு

திருப்பூர், ஜூன் 12 – திருப்பூரில், சொந்த ஊருக்குச் செல்ல விரும்பிய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 19 பேரை கட்டாயப்படுத்தி தங்க வைத்து வேலை வாங்க முயன்ற பின்னலாடை நிறு வனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே உள்ள பின்னலாடை நிறுவனத் தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்  தொழிலாளர்கள் 19 பேர் வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கினால் முடங்கியிருந்த நிலையில், இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந் தனர். ஆனால், சம்பந்தப்பட்ட பின்ன லாடை நிறுவன நிர்வாகம், புலம் பெயர்ந்த  தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மறுத்துவிட்டதுடன், அவர்களைக் கட்டாயப்படுத்தி இங்கு இருக்க வைத்துள் ளனர். இதுகுறித்து, புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதுப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் திருமுரு கன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் காவல் துறையினர் அந்த நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை ஊழியர் கவியரசு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், காவல் துறையினர் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 19 பெண் தொழிலாளர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஜார்கண்டில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்புவதை உறுதிப்படுத்தினர்.  இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு 19 பெண் தொழிலாளர்கள் ஜார்கண்ட் மாநிலத் திற்கு செல்வதற்கு தனி பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பெண் தொழிலாளர் களை வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் திருமுருகன்பூண்டி காவல் துறையினர் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைத்த னர்.