tamilnadu

img

5 மாத சம்பளம் பாக்கி  பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 27 -தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையம் முன்பாக திங்களன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவர்களது கோரிக்கையை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.முகமது ஜாபர், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், கிளைச் செயலாளர் அருண் தேவசகாயம் ஆகியோர் உரையாற்றினர். இதில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.