தாராபுரம், செப். 7 - போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 17 பி சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ சார்பில் தாராபு ரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 17 பி சட்டத்தை ரத்து செய்ய வேண் டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று தாராபுரம் தாலுகா அலு வலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட் டக்கிளை தலைவர் பி.ராஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் செந்தில், ராஜாமணி, கண்ணன், பால்ராஜ், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், பி.ரீட்டா, ஐடிஐ அலுவலர் சங்க நிர்வாகி மேகலிங்கம், தமிழ் நாடு ஓய்வுபெற்றோர் நல சங்க வட்டக் கிளை பொருளாளர் ராஜேந்திரன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது சிறை சென்ற ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீதான தண்டனையை எந்த நிபந்தனை யுமின்றி ரத்து செய்யவேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.