திருநெல்வேலி, மே 24- நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பா வூர் பகுதியை சேர்ந்தவர் கொம்பவாசகம் மகன் ராஜ் (21) டிராக்டர் ஓட்டுநர். இவர்களது பக்கத்து வீட்டில் கொம்ப வாசகம் தம்பி குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தம்பியின் மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாண வியின் தாய் இறந்து விட்டதால் சித்தியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இதனையடுத்து தங்கை முறை என்பதால் ராஜ் மாண வியை பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மாணவியின் சித்தி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.