அரியலூர், பிப்.12 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள அழிசுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (21). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்த நிலையில், தற்போது சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவ லர் துரைமுருகனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தில் ரகுவை கைது செய்தனர். மேலும், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பெற்றோர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.