tamilnadu

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிக்கை

திருநெல்வேலி, ஜூலை 26- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பாக காணொலி காட்சி வழியாக செயற்குழு கூட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட் டணி மாவட்ட செயலாளரும், இந் தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப் பின் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான செ. பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் முருகையா, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் தளவாய், ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் மூ.பிரமநாயகம், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சாலமோன் முன்னிலை வகித்தனர். முன்ன தாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பி.ராஜ்குமார் வரவேற்று பேசி னார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் சோ. முருகேசன், இந்தியப் பள்ளி ஆசி ரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெனற் பொற்செல்வி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சங்கை ஞா. பால்ராஜ் விளக்கவுரை ஆற்றினர்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மூ.மணிமேகலை, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில மைய முடிவுகள், கோரி க்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான குற்றவியல் நடவடிக்கை களை ரத்து செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப் பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் கழகம் மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீதான குற்ற குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி விரை வில் பள்ளியை சுழற்சி முறை யில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் ஆசி ரியர் சங்கங்கள் திரளாக கலந்து கொள்வது எனவும் முடிவாக்கம் செய்யப்பட்டது. நிறைவாக முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழக திருநெல்வேலி மாவட்ட அமை ப்பு செயலாளர் சதிஸ் குமார் நன்றி கூறினார். காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இச்செயற் குழுவில் இந்தியப்பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து சங்கங்க ளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.