tamilnadu

img

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு தினம்... தாமிரபரணி ஆற்றில் சிபிஎம் மலர் தூவி அஞ்சலி

திருநெல்வேலி:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 20 ஆண்டு நினைவு தினத்தை முன்னி ட்டு நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர்தூவி அஞ்சலி செலுத்தியது.

கடந்த 1999ம் ஆண்டு ஊதியஉயர்வு கோரி மாஞ்சோலை தேயி லை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தினர். இதில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் ஒன்றரை வயது குழந்தை  விக்னேஷ் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு ஜூலை 23 வியாழக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் மலர் தூவி அஞ்சலிசெலுத்தப் பட்டதுஇந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில குழு உறுப்பினர் ஆர்.கருமலையான், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், க.ஸ்ரீராம், எம்.சுடலைராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிமாவட்ட தலைவர் மதுபால் மற்றும்தோழர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்டசெயலாளர் கே.ஜி.பாஸ்கரன் செய்தியாளர்களி டம் கூறுகையில்,  மாஞ்சோலை தேயிலைத்தோட்டத்தொழி லாளர்களின் நினைவாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்  பெயரை சூட்ட வேண்டும், தாமிரபரணி ஆற்றில் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றார்.