திருநெல்வேலி, ஜூன் 18- நெல்லை மாவட்டம் களக்காடு வட்டா ரத்தில் கடந்த 1 வாரமாக வெயிலின் தாக் கம் அதிகரித்து வருவதால் தற்போது பயிரிட்ட வாழைக் கன்றுகள் கருகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயி கள் கவலையடைந்துள்ளனா். களக்காடு வட்டாரத்தில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் வாழைத்தார் விற்பனை களைகட்டும். இங்கிருந்து கேர ளத்துக்கு அதிகமான ஏத்தன் வாழைத் தார்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஜூன் மாதம் பொழியும் தென்மேற்குப் பருவமழையை நம்பி மே, ஜூன் மாதத் தொடக்கத்தில் வாழை பயிரிட்ட விவசாயி கள் மழை பெய்யாததால் தண்ணீா் பாய்ச்ச சிரமப்பட்டு வந்த நிலையில், கடந்த 1 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பயிரிட்டு 1 மாதமே ஆன வாழைக் கன்றுகள் போதிய தண் ணீரின்றி தளிர் விடாமல் உள்ளன. இத னால் விவசாயிகள் கவலையடைந்துள்ள னர்.