நாகர்கோவில், மே 14- தூய்மைப் பணியாளர்களுக்கு கேரளா வைப் போல காப்பீடு உள்ளிட்ட சிறப்பு திட் டங்கள் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் வியாழனன்று கன்னியா குமரி மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கன்னியாகுமரி மாவட்டக் குழு அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கே.தங்கமோகன் தலைமை வகித் தார். இதில் நிர்வாகிகள் மாணிக்க வாசகம், கே.பி.பெருமாள், ஸ்டீபன் ஜெயக்குமார், எஸ்.அந்தோணி, பிரேமானந்த், மீனாட்சி சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், கோட்டார் சுகாதார ஆய்வா ளர் அலுவலகம், வடசேரி மின் வாரிய அலு வலகம், ராணித்தோட்டம் போக்குவரத்து பணிமனை, வாத்தியார்விளை அங்கன் வாடி மையம் உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.