tamilnadu

img

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஆக.12- மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகள், தொழிற் சங்க உரிமை பறிப்பு, பொதுத் துறை நிறுவனங்களை தனி யாருக்கு விற்பனை கண்டித்தும், அனைத்து மக்களுக்கும் கொரோனா நிவாரண நிதி மாதம் ரூ.7500 வழங்க வேண்டும் உள் ளிட்டவை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., வி.ச., வி.தொ.ச, மாதர், வாலி பர் சங்கத்தின் சார்பாக பாப்பாக் குடி ஒன்றியத்தில் 17 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில், அருணா சலம், சூசைஅருள்சேவியர், கிருஷ்ணவேணி, கருப்பசாமி, பாஸ்கர், ராமசாமி, ஜெகநாதன், கலா, பார்வதி, பொன்பெருமாள், அபிநாத், புவனேஷ், க.மாரி செல்வம், லட்சுமணன், ஆறுமுக சேட், ஜீவா, முகமது முஸ்தபா, பத்மநாபன், முத்தப்பா, அருள் தாஸ், மகேஷ் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.