திருநெல்வேலி, ஆக 19- பெட்ரோல் டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், ஆட்டோ தொழிலா ளர்களுக்கு மாதம் ரூ.7,500 ஆறு மாத காலத்திற்கு நிவாரணமாக வழங்கிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் கடன் வழங்க வேண்டும் ,ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ தொழிலாளர்கள் குடும் பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வலியுறுத்தி நெல்லை வட்டார போக்கு வரத்து அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொ துச்செயலாளர் ஆர் . முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகி கள் சுரேஷ், உதயசூரியன் ,கந் தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் சுடலை ராஜ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், கௌர வத் தலைவர் வரகுணன் ஆகி யோர் பேசினர்.
தென்காசி
தென்காசி ஆர்டிஒ அலுவல கம் முன்பு குத்துக்கல்வலசையில் செவ்வாய்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட துணை செயலாளர் அற்புத ஜெகன் பிரகாஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீரபுத்தி ரன், ரவி (எ) ராமச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் தி.கண பதி, சிஐடியு மாவட்டதலைவர் எம்.வேல்முருகன், வட்டார நிர்வாகிகள் லெனின்குமார், கிருஷ்ணன், ராஜசேகர் தாணு மூர்த்தி, சுப்பிரமணியன், முரு கேசன் ஆகியோர் பேசினர்.