tamilnadu

திருபுவனம் திகோ சில்க் சங்க நெசவாளர்களுக்கு நிவாரணம் கோரி அமைச்சரிடம் சிஐடியு கோரிக்கை

கும்பகோணம், ஆக.1- திருபுவனம் திகோ சங்க நெசவா ளர்களுக்கு மாதம் ரூ.5 ரூபாய் வீதம்  மூன்று மாதத்திற்க நிவாரண உதவி த்தொகை வழங்கக்கோரி சிஐடியு நெச வாளர் சங்கம் சார்பில் தமிழக கைத்தறி  அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்க ப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஐடியு கைத்தறி சங்க தலைவர் என்.பி.நாகேந்திரன் கூறுகை யில், தஞ்சை மாவட்டம் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்கள் திருபுவனம், திருநாகேஸ்வரம், அம்மா சத்திரம் பகுதிகளில் 2000 தறிகள் மூலம்  10 ஆயிரம் பேர் வாழ்ந்து வரு கின்றனர். கொரோனோ வைரஸ் தொற்று ஊரடங்கு உத்தரவினால், கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாத ங்களாக சரிவர வேலையின்றி வருமா னமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டமான நிலையில் வாழ்ந்து வரு கின்றனர். குடும்பத்தில் உள்ள பெரிய வர்களும் குழந்தைகளும் மருத்துவ செலவு செய்ய முடியாமல் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் கஷ்ட நிலையை எதிர்கொண்டு வரு கின்றனர்.  எனவே திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் தேங்கியுள்ள பட்டு சேலை களை தமிழக அரசின் கைத்தறி துறை கொள்முதல் செய்து வேலைவா ய்ப்பிற்கு வழிவகை செய்வதோடு சங்க  நெசவாளர்களுக்கு சங்க நிதியில் இருந்து மூன்று மாத காலத்திற்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரண உதவித் தொகை வழங்கி நெசவாளர்களை பாதுகாக்க வேண்டுமென தமிழக கைத்தறி துறை அமைச்சருக்கும், கைத்தறி துறை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் மேலாண்மை இய க்குனருக்கும் சிஐடியு கைத்தறி நெச வாளர் சங்கம் சார்பில் மனு வழங்க ப்பட்டது என்றார்.