தூத்துக்குடி, ஆக.3- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது உயிர் நீத்த மற்றும் படுகாயம் அடைந்த உறவி னர்களுக்கு கல்வித் தகுதி அடிப் படையில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கிட கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப் பட்ட மக்கள் சார்பில் மனு அளிக் கப்பட்டது. இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தினால் இழப்பிலும், துயரத்திலும் மீள முடியாத நிலையில் வாழும் எங்களது குடும்பத்திற்கு அரசு, கருணை அடிப்படையில் வேலை என்ற பெயரில் கல்வித் தகுதியின் அடிப்படையில் இல்லாமல் அரசின் மிகக் கடை நிலை பணியாளராக மிகக் குறைந்த ஊதியம் பெறும் வேலை அளித்திருப்பது, ஏதோ கண்துடைப்பாக கொடுத்திருப்ப தாக கருதுகிறோம். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் போது, இளநிலை உதவியாளர் பணிக்கு குறைவான பதவிகளில் பணி நியமனம் செய்யக் கூடாது என்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் படு கொலையான மற்றும் உடல் உறுப்புகளை இழந்த எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் வேலை வழங்கியதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக உணருகிறோம். எனவே தமிழக அரசு எங்க ளுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கிட ஆவண செய்ய வேண்டும். மேலும் படுகொலை யான தியாகிகளின் நினைவாக நினைவகம் அமைத்திடவும், ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் மீண்டும் திறந்தி டாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.