தூத்துக்குடி, மே 31- தூத்துக்குடியில் தினமும் 120 படகுகள் வீதம் விசைப்படகு மீனவா்கள் திங்கள் (ஜூன் 1) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் ஆயத்தமாகி வருகின்றனா். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 50 நாட்டுப்படகுகள் மட்டும் கடலுக்குச் செல்ல வேண்டும் என்றும், கட லுக்குச் செல்லும் மீனவா்கள் கட்டாயம் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அரசு நிபந்தனை விதித்துள்ளது. மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விசைப்படகு மீன வர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங் கேற்ற ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி சார் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன் தலைமையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தள மாக கொண்டு 241 பதிவு செய்யப்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன.
அவற்றில் ஜூன் 1 ஆம் தேதி முதல், தினமும் 120 படகுகள் வீதம் கட லுக்குச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள் ளது. மீன்பிடித் துறைமுகத்துக்கு வரு பவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய துறைமுக வாசலில் தொ்மல் இமேஜ் ஸ்கேனா் கருவி பொருத்தப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார். மேலும், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீன் கொள்முதலுக்கு வரும் வியா பாரிகள் கட்டாயம் கை கழுவி சுத்தம் செய்த பின்னரே மீன்பிடித் துறைமுகத்துக்குள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத னைத் தொடா்ந்து, விசைப்படகு மீனவர் கள் திங்கள் முதல் கடலுக்கு செல்ல ஆயத் தமாகி வருகின்றனர்.