தூத்துக்குடி, ஜூன் 1- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்களன்று காலை 120 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கட லுக்கு சென்றனர். மீனவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விசைப்படகு மீன வர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தினமும் 120 படகுகள் வீதம் கடலுக்குச் செல்ல அறி வுரை வழங்கப்பட்டது. மேலும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீன் கொள்முதலுக்கு வரும் வியாபாரிகள் கட்டாயம் கை கழுவி சுத்தம் செய்த பின்னரே மீன்பிடித் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப் படும் என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து திங்க ளன்று காலை 5 மணிக்கு 120 படகுகள் கட லுக்குச் சென்றது. இதனை மீன்துறை உதவி இயக்குனர் வைலா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.