tamilnadu

img

தங்கு கடல் முறைக்கு அனுமதி கோரி விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

திருநெல்வேலி, மார்ச் 5- நெல்லையில் சனிக்கிழமை குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து மாநாட்டு அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,கனி மொழி எம்.பி. தமிழ்நாடு காங்கி ரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் உ.வாசுகி, விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல் திருமாவளவன், மத்தி முகப் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபா ரக், பாலபிரஜாபதி அடிகளார், கடையநல்லூர் எம்எல்ஏ அபு பக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர் மாநாடு சனியன்று மாலை ஹைகிர வுண்ட் எம்.ஓ.சி திடலில் நடை பெறுகிறது இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்ட தலைவர் பழனி, மதி முக மத்திய மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ நிஜாம் மற்றும் பாதிரி யார்கள், சமூக ஆர்வலர்கள் உட் பட பலர் உடனிருந்தனர்.