தூத்துக்குடி, டிச.29- தூத்துக்குடி மாநகராட்சி 24-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி களில் முதியோருக்கு உதவி பணம், விதவைகளுக்கு தையல் இயந்திரம், வார்டு சுகாதார பணியாளர்க்கு விருது மற்றும் பரிசு பணம் வழங்குதல், லூசியா கண் பார்வையற்றோர் பள்ளிக்கு உதவி, முதியோர் இல்லத்திற்கு உதவி வழங்குதல், அதிக மதி ப்பெண் எடுத்த மாணவ-மாணவியருக்கு பரிசு மற்றும் உதவி பணம் வழங்கும் விழா நடைபெற்றது. தூய பனிமய மாதா பங்கு அதிபர் குமார் ராஜா, சின்னகோவில் பங்கு தந்தை ஜோசப் ரோலிங்டன் லூசியா இல்ல இயக்குனர் கிராஸிஸ் மைக்கேல் ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர்.