tamilnadu

img

குடிநீர் வசதி செய்து தரக்கோரி சிபிஎம் காத்திருக்கும் போராட்டம்

தூத்துக்குடி, ஆக.10- ஒட்டப்பிடாரம் அருகே உள்ள  முப்புலிவெட்டி  கிரா மத்திற்கு  வடக்கு பரும்பூர், தெற்கு பரும்பூர், ரைஸ்மில் காலனி,  மேட்டூர்,  வ.உ.சி காலனி  வழியாக  சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது.  ஆனால்  முப்புலி வெட்டி கிராமத்திற்கு  குடிநீர் சரியாக வருவதில்லை.  இதனால் முப்புலிவெட்டி  கிராமத்திற்கு  ஒட்டப்பிடாரம் வட்டார அலுவலர் அலுவ லகத்திலிருந்து சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்ட மூலம் தனி பைப் லைன் அமைத்து சீரான குடிநீர் வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்  நடத்தப்பட்டது.   போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சண்முகராஜ் தலைமை தாங்கினார்.  ஒன்றிய செய லாளர் ராகவன்,  ஒன்றிய பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வைத் தனர்.  காத்திருக்கும் போராட் டத்தை தமிழ்நாடு  விவசாயி கள் சங்க  மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தொடங்கி வைத்து பேசினார்.  இதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரகு தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை  நடந்தது.  சீவலப்பேரி முதல் விளாத்திகுளம் வரையிலான கூட்டுக் குடிநீர் திட்டப் பைப் லைனில்  இருந்து தனி பைப் லைன் மூலம் குடிநீர்  வழங்கு வதற்கு தொழில்  நுட்ப கார ணங்களினால்  சாத்திய மில்லை.  ஏற்கனவே முப்புலி வெட்டி  கிராமத்திற்கு அமைக் கப்பட்டுள்ள பைப் லைனில்  ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டு தற்போது வழங்கப்படும் நீரின் அழுத்தத் தை அதிகரித்து வழங்கிட வழிவகை செய்யப்படும். முப்புலிவெட்டி  கிராமத்தி ற்கு ஏற்கனவே உள்ள குடிநீர் பைப் லைனில் இருந்து  தனி யாக  பைப் லைன் வழங்கு வது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம்  உரிய ஒப்புதல் பெற்று வரும் 25 தேதிக்குள்   தனி பைப் லைன் பணிகள்  துவங்கப்படும் என் று பேச்சு வார்த்தையில் முடிவு செய் யப்பட்டது.   இதனைத் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம்  கைவிடப்பட்டது.  இந்தப்  பேச்சுவார்த்தை யில் ஒட்டப்பிடாரம் யூனியன் கூடுதல் ஆணையாளர்,  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி,  வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன்,  கிராம நிர்வாக அலுவலர் கதிர்வேல் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.