புதுக்கோட்டை, நவ.22- பல கட்டப் போராட்டங்களை நடத்தி யும் பேருந்து இயக்காததைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று பொதுமக்கள் காத்திருக்கும் போராட்ட த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆலங்குடியிலிருந்து பாச்சிக் கோட்டை, வாழைக்கொல்லை, மழை யூர் வழியாக கறம்பக்குடிக்கு காலை யிலும், மாலையிலும் கடந்த 2018-ல் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்து வாழைக்கொல்லை, குளவாய்ப்பட்டி, மேட்டுப்பட்டி, மழையூர், விஜயரெகுநாதபட்டி கிராமங் களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி களுக்குச் செல்லும் மாணவ, மாணவி களுக்கு பேருதவியாக இருந்தது. இக் கிராமங்களில் இருந்து கூலி வேலைக்காக வெளியூருக்கு செல்பவர் களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், சில மாதங்களே இயக்கப்பட்ட பேருந்து திடீரென நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்படி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து மனுக்கொடுத்தும் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் பேருந்து இயக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆலங்குடி அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பேருந்தை இயக்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தை நடத்துவது என அறிவித்து துண்டுப்பிர சுரமும் வெளியிடப்பட்டது. இதனை யடுத்து திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை யன்று காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பூங்கோதை முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் கண்டன உரையாற்றினார். திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், ஆலங்குடி நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணி யன், கறம்பக்குடி தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தரமூர்த்தி, ஆர்.சக்திவேல், ஆர்.காமராஜ், என். மதியழகன், பி.ராமாமிர்தம், எம்.மாரி முத்து, கே.முத்துச்சாமி, ஏ.ராஜேந்தி ரன், ஏ.லாசர், டி.அஞ்சலை உள்ளிட் டோர் பங்கேற்றனர். போராட்டம் தொடரப்பட்டு வெகு நேரமாகியும் அதிகாரிகள் வராததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிடத் தொடங்கினர். தொடர்ந்து போராட்டக் களத்திற்கு வந்த ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்து ராஜா, அரசுப் போக்குவரத்துப் பணி மனை மேலாளர் ராஜேந்தின் ஆகியோர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வரு கின்ற நவ.30-ஆம் தேதிக்குள் மேற்படி வழித்தடத்தில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொட ர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.