tamilnadu

தூத்துக்குடியில் காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு

 தூத்துக்குடி, ஆக.1- தூத்துக்குடியில் காமராஜர் சிலையை இடமாற்றம் செய்ய உத்தரவிட்ட, மாநகராட்சி ஆணையரை மாற்றம் வேண்டும் என திருநெல்வேலி தக்ஷிண மாற நாடார் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் காளிதாசன், செயலாளர் சண்முக வேல், பொருளாளர் செல்வராஜ் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வஉசி மார்க்கெட் அருகே காமராஜர் சிலை அமைக்கப் பட்டுள்ளது. இந்த சிலையை இடமாற்றம் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மாநக ராட்சி ஆணையர் உத்தரவிடடுள்ளதைக் கண்டிக்கிறோம். காமராஜரின் சிலையை அகற்றக் கோரும் உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்றும் திரும் பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப் படும். மேலும் காமராஜர் சிலையை இட மாற்றம் செய்ய உத்தரவிட்ட மாநக ராட்சி ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.