tamilnadu

விதொச நிர்வாகி மீது பொய் வழக்கு: காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 13- விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் துணைத் தலைவர் மலைவிளைபாசி யை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எட்டைய புரத்தில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  குமரி மாவட்டம் நாகர் கோவில் தக்கலை பகுதியில் தலித் மக்களுக்கான படித் துறையை தனிநபர் ஆக்கிர மித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தின் போது அங்கு இருந்த இளைஞரை வடசேரி காவல் உதவி ஆய்வாளர் அனில்குமார் தாக்கி உள்ளார். இதனை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் மலை விளைபாசி தட்டிக் கேட்டுள் ளார். உடனே அவரையும் காவல் உதவி ஆய்வாளர் அனில்குமார் சட்டையை பிடித்து இழுத்து அவ தூறாக பேசி பொய் வழக்கும் பதிந்துள்ளார். இதனை கண் டித்தும், பொய் வழக்கை வாபஸ் வாங்க கோரியும் எட் டையபுரம் மேலவாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விதொச மாவட்ட தலைவர் கு.ரவீந்திரன் தலைமை தாங்கினார். செல்வகுமார், மாடசாமி, நடராஜன், மாரி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.