தூத்துக்குடி, ஜூன் 25- கொரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக ஹோமியோபதி மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30சி பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரத்ததான கழகம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெரு வில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், ஹோமியோபதி மருத்துவர் பெலிக்ஸ் கிளிப்போர்டு நோய்த்தொற்று சம்பந்தமாகவும் நோயிலிருந்து விடுபடுவது சம்பந்தமாகவும் மருந்தை உட்கொள்வது சம்பந்தமாகவும் பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சி முத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புற நகர செயலாளர் பா.ராஜா, வாலிபர் சங்க மாவ ட்டப் பொருளாளர் டேனியல்ராஜ், மாதர் சங்க புறநகர தலைவர் பி.சரஸ்வதி, வாலிபர் சங்க 53-வது வார்டு நிர்வாகிகள் ராஜேஷ், இசக்கி ராஜா, காங்கிரஸ் தெற்கு மண்டலத் தலைவர் தங்கராஜ் முன்னாள் துறைமுக ஊழியர் பரம சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.