தூத்துக்குடி, ஜூன் 17- வ.உ.சிதம்பரனார் துறை முகம் ஒரே நாளில் அதிக ளவு சரக்குகளை கையாளு தல் மற்றும் 24 மணி நேர த்தில் அதிகளவு நிலக்கரியை கையாளுதல் ஆகிய இரண்டு புதிய சாதனைகளை படை த்துள்ளது. இதுகுறித்து வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகம் செவ்வாயன்று வெளியிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பதாவது: வ.உ.சிதம்பரனார் துறை முகம் ஜூன் 12 அன்று ஒரே நாளில் 1,89,395 மெட்ரிக் டன் சரக்குகளை கையா ண்டு, இதற்கு முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்து ள்ளது. இச்சாதனைக்கு முக்கியமாக தொழில்கரி (53,077 டன்கள்) அனல்மின்கரி (45,829 டன்கள்), கிலிங்கர்ஸ் (13,217 டன்கள்), புன்னாக்கு (4,000 டன்கள்), காஸ்டிக் சோடா (2,241 டன்கள்) மற்றும் சரக்கு பெட்டக சரக்குகள் (70,254 டன்கள்) கையாளப்பட்டதால் இச்சா தனை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வ.உ.சிதம்பரனார் துறை முகத்தின் கப்பல் சரக்கு தளம் 9-ல் ஜூன் 12 அன்று எம்.வி. கீரின் கேமாக்ஸ் எஸ் என்ற கப்பலிலிருந்து 55,363 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு சாதனை படைத்துள்ளது. லைபீரியா நாட்டு கொடி யுடன் எம்.வி. கீரின் கேமாக்ஸ் எஸ் என்ற கப்பல் இந்தோ னேஷியா நாட்டிலுள்ள அடா ங்க் என்ற துறைமுகத்தி லிருந்து 76,285 டன் நிலக்கரியை வ.உ.சி தம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. இக்க ப்பலில் வந்த 76,285டன் நிலக்கரி சென்னையிலுள்ள இந்தியா கோக் மற்றும் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்காக இற க்குமதி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரனார் துறை முகபொறுப்புக் கழகத் தலை வர் தா.கி.ராமசந்திரன் இந்த ஒருங்கிணைந்த சாத னையை படைக்க காரண மாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பா ளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்துஅதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழி லாளர்கள் அனைவருக்கும் நன்றியையும், பாராட்டுக்க ளையும் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.