tamilnadu

img

சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூலை 25- 7 வயது சிறுமி படு கொலை செய்யப்பட்ட சம்ப வத்தை கண்டித்து மெய் ஞானபுரத்தில் ஜனநாயக மாதர் சங்கம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் உடன்குடி ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டி, மாதர் சங்க ஒன்றிய செயலா ளர் உலகமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பேச்சி முத்து, உடன்குடி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாதர் சங்க மாவட்ட செய லாளர் பூமயில்,  துணைத் தலைவர் கலைச்செல்வி, பொருளாளர் ராமலெட்சுமி, உடன்குடி ஒன்றிய தலைவர் செல்வி, தூத்துக்குடி புற நகர் தலைவர் சரஸ்வதி, விதொச கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.