தூத்துக்குடி, ஜூன் 25- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்கஸ் ஆகி யோர் கடந்த ஜூன் 19 அன்று காவல்து றையால் கைது செய்யப்பட்டு கோவி ல்பட்டி கிளை சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்நிலையில ஜூன் 22 அன்று இரவு மகன் பென்னிக்ஸ், ஜூன் 23 காலை தந்தை ஜெயராஜ் ஆகியோர் மர்மமான முறையில் கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் வணிகர்களாகிய தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்நிலையத்தில் சித்ர வதை செய்து படுகொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வா ளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறை துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயராஜ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஜெயராஜ் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் முழுவ தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தூத்துக்குடி சிதம்பர நகரில் சிபிஎம் மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். இதில் மாவட்ச்ட செய லாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரசல், ஒன்றி யச் செயலாளர் சங்கரன், மாவட்ட க்குழு உறுப்பினர்கள் அப்பாதுரை, சீனி வாசன், மாநகர் குழு உறுப்பினர்கள் கே. ஆறுமுகம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முத்து, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் முருகன், இராமசுப்பு, கிருஷ்ணவேணி, ஒன்றியச் செயலாளர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க நிர்வாகிகள், நகரக்குழு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருவைகுண்டம்
திருவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் சு.நம்பிராஜன் தலைமையில் திருவைகுண்டம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ராமலிங்கம் மற்றும் முருகேசன், முருகன், வீரன், மாரியப்பன், மாடத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
எட்டயபுரம் பட்டத்துவிநாயகர் கோவில் திடலில் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் கு.ரவீந்திரன் பேசினார். தாலுகா குழு உறுப்பினர்கள், இளம்புவனம் செயலா ளர் மூக்கையா, குளத்துப்பட்டி செயலா ளர் மாரிமுத்து நகர குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு தாலுகா செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் ராமலிங்கம், ஜோதி, மலைக்கனி மற்றும் கிளைச் செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, அழகுமுத்து மற்றும் மணி, பிச்சைக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.