தூத்துக்குடி, மார்ச் 5- தமிழகத்தில் கொரானோ வைரஸ் தாக் கம் இல்லை. எனினும் அதுகுறித்த விழிப்பு ணர்வை தெரிந்துகொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம் பாட்டு மையம் திறப்பு விழா வியாழனன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சி யர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தினை துவக்கி வைத்து, இயற்கை உணவு கண் காட்சி மற்றும் மூலிகை செடிகள் கண்காட்சி யினை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் ஆட்சி யர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோவில் பட்டி, சாத்தான்குளம் ஆகிய 2 பகுதிகளில் உள்ளது. சாத்தான்குளம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மட் டும் லட்சக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவியர்கள் படிப்பை முடித்து வெளி யேறி வருகிறார்கள். அவர்களின் போட்டி களை உணர்ந்து உங்களின் தரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசு இளைஞர்களின் தொழில் தொட ங்குவதற்காக மானியத்துடன் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி வருகிறது. திட் டங்கள் குறித்து தெரிந்தால்தான் விண்ணப் பித்து பயன்பெற முடியும். இப்பகுதியில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் அதற் கான தொழில்களை தெரிந்து தொடங்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் களை தொடங்க வேண்டும். தொழில் தொடங்க அரசு கடன் உதவிகள் வழங்க தயாராக உள்ளது. தமிழகத்தில் கொரானோ வைரஸ் தாக் கம் இல்லை. எனினும் அதுகுறித்த விழிப்பு ணர்வை தெரிந்துகொள்ள வேண்டும். நோய் தாக்குதல் ஏற்பட்டால் மரணம் என பயப்பட தேவையில்லை. அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவதால் இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்தலாம். மேலும், சளி, தும்மல் உள்ளவர்கள் கர்சிப்பை பயன்படுத்த வேண்டும். பொது இடங்களுக்கு சென்று வருபவர்கள் கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்றார்.