தூத்துக்குடி, ஜூலை 19- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் கொரோனா தொற்று தடுப்பு ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், அரிமா சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில், சாத்தான்குளத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வரும் 21- ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 11 நாட்கள் முழுமையாக கடை களை அடைக்க வட்டாட்சியர் ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.