திருவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்ட செம்மலர் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் தொழிலாளர் களின் நிலை குறித்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் 706 நபர்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
ஆய்வறிக்கை வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செம்மலர் அமைப்புசாரா அமைப்பு, கட்டுமானதொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இணைந்து நடத்திய இவ்விழாவிற்கு செம்மலர் சங்கத் தலைவர் பிரியா தலைமை வகித்தார். ஆய்வறிக்கையை மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி வெளியிட, செம்மலர் சங்கப் பொருளாளர் முனீஸ்வரி பெற்றுக்கொண்டார்.தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுனன், கருப்பசாமி, ராமலட்சுமி, குருவம்மாள், ராக்கம்மாள், பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட் டுள்ள அம்சங்கள் வருமாறு:கொரோனாவால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூபாய் 9,000 வழங்க வேண்டும். நலவாரியத்தில் உறுப்பினர் பதிவை எளிமையாக்க வேண்டும். நலவாரியங்கள் குறித்ததகவல்களை அவ்வப்போது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளால் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. குடும்பங்கள் சீரழிகிறது. அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும். கொரோனாவால் பஞ்சாயத்து நிர்வாகங்கள் முடங்கியுள்ளன. குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தொழிலாளர்களின் உரிமைக்கான சட்டங்களை தீவிரமாக நடைமுறைப் படுத்த வேண்டும். சூழலியல் தாக்க மதிப்பீடு- 2020 வரைவு அறிக்கை இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கையாகும். எனவே வரைவறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசியமாதர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி, “ஊரடங்கு காலத்தில்குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகள் அதிகரித்துள்ளது. மாதர் சங்கத்தின் சார்பில் 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மதுபானக் கடைகள் திறந்திருப்பதால் வருமானம் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை விற்று மது குடித்துவருகின்றனர். இதனால் பல்வேறு குடும்பங்களில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்றார்.