திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் பகுதியில் பச்சைநிறத்திலான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்துள்ளன. இவை வாழை மரங்களையும் வாழைக்காய் களையும் கடித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது படிக்காசுவைத்தான்பட்டி. அங்கு அதிகளவு வாழை விவசாயம் நடைபெறுகிறது. தற்போது வாழை இலைகள் மற்றும் காய்கள் அதிகளவு உள்ளது.
இந்த நிலையில் கூட்டம் கூட்டமாக வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் வாழை இலைகள், வாழைக் காய்களை சேதப்படுத்துகின்றன. வாழை இலைகளில் கூட்டம் கூட்டமாக தங்கி உள்ளன. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பூரணி தேவசேனா, கண்ணன் , சித்திரைச் செல்வி சென்று வெட்டுக்கிளிகளால் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டனர்.பின்னர் அவர்கள் கூறுகையில், “இந்த வெட்டுக்கிளிகள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவை தான். வேறெங்கிருந்தும் வர வில்லை. பாதிப்பு குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப் படுமென்றனர்.