திருவாரூர்
தமிழகத்தில் புதிய அவதாரத்தைத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் தினமும் சராசரியாக 600-க்கும் மேற்பட்டோரை நோயாளிகளாக மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட தலைநகர் மண்டலமான சென்னை கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 760 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 81 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 7 ஆயிரத்து 117 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு, 56 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் சென்னையின் பங்கு 50 சதவீதமாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் கிழக்குப் பகுதி மாவட்டமான திருவாரூர் கொரோனா இல்லாத பகுதியாக மாறுகிறது. அங்கு மொத்தம் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்றைய நிலவரப்படி 29 பேர் கொரோனாவை வென்று திரும்பியிருந்த நிலையில், மீதம் 3 பேர் சிகிச்சையிலிருந்தனர். அவர்கள் மூவரும் செவ்வாயன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் திருவாரூர் மாவட்டம் பச்சை மண்டலத்தைப் பெற்று கொரோனா இல்லாத பகுதியாக மாறியுள்ளது.