விருதுநகர்:
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநில அளவில் தேர்ச்சி பெற்றதில் 97.90 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி கூறுகையில், இந்த முன்னேற்றத்திற்கு காரணம் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அயராத உழைப்புதான். கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சி அளித்ததால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் 0.20 சதவீதம் தேர்ச்சி அதிகரித்திருந்தால் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றிருக்கலாம் என்றார். பிளஸ் 1 தேர்வில் மாணவர்கள் 10 ஆயிரத்து 318 பேர், மாணவிகள் 12ஆயிரத்து 282 பேர் என மொத்தம் 22ஆயிரத்து600 பேர் தேர்வு எழுதியதில் மாணவர்கள்10 ஆயிரத்து 10 பேர், மாணவிகள் 12 ஆயிரத்து 116 பேர் என மொத்தம் 22ஆயி ரத்து 126 பேர் தேர்ச்சி பெற்றனர்.